முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விண்டு உள்ளிட்ட 3 பேரின் காவல் நீட்டிப்பு

புதன்கிழமை, 29 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 30 - கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக நடிகர் விண்டு உட்பட 3பேரின் போலீஸ் காவலை நாளை 31 ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் நடிகர் விண்டு ரந்தவா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விண்டு மற்றும் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யும் அல்பேஷ் பட்டேல் தரகர்களை தொடர்பு கொள்ளும் பிரேம் தனேஜா உள்ளிட்டோரின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரி அரசு வழக்கறிஞர் கிரண் பெண்ட்பார் மும்பை பெருநகர கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பாகிஸ்தான் நடுவர் அஸாத்ரெப்புக்கு வழங்கப்பட்ட சிம் கார்டை அழித்து விடுமாறு போலீசாரால் தேடப்படும் சூதாட்ட தரகரான சஞ்சய் ஜெய்ப்பூரிடம் நடிகர் விண்டு கூறியுள்ளார். நடிகர் விண்டுவுடன் பாகிஸ்தான் நடுவர் ரெஸ்ப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியதுள்ளது. அதே போல் டெல்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அஸ்வின் அகர்வாலையும் விண்டுவையும் ஒன்றாக வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்றார். போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி பட்வாத் நடிகர் விண்டு உட்பட 3 பேரின் போலீஸ் காவலை நாளை 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago