முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளம்பரப் படத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர்கான்..!

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

மும்பை, ஜூன். 5 - பாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க ரூ.88 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவை விட விளம்பரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் இன்றைய நடிகர்கள். காரணம் கவிதையாய் சொல்லும் விளம்பரங்கள் மக்களிடம் எளிதில் சென்றடைகிறது. நடிகர்கள் உபயோகிக்கும் பிராண்டுகளை ரசிகர்களும் பின்பற்றுகின்றனர் என்பதாலேயே விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தவிர கைமேல் அதிக காசும் கிடைக்கிறது. இந்திப் பட உலகில் சல்மான், ஷாரூக், அமீர் போன்ற பிரபல நடிகர்களும், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் போன்ற நடிகைகளும் விளம்பரப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 88 கோடி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்