முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடக்கம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

கன்னியாகுமரி, ஜூலை.2 - கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்தியது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயரமுள்ள  திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்ப்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்  மூலம் படகுகள் இயக்கப்படுகிறது.  

திருவள்ளுவர் சிலை உப்புக் காற்றால் சேதமடையாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூச வேண்டும். இந்த பணிகளுக்காக தமிழக அரசு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. தடந்த 4 மாதங்களாக இந்தப் பணிகள் நடைபெற்று வந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதால் படகு போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று படது சேவை தொடங்தியது. இதனால் ஏராளமான பயணிகள் இங்கு வந்து குவிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்