முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துக்கள் சேதம்: பாமகவினர் மீது 30-ம் தேதி விசாரணை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.5 - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதானபோது வடமாவட்டங்களில் அரசு சொத்துக்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் மீது வரும் 30-ம் தேதி முதல் தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள், சாலை, பாலம் மற்றும் அரசு பேருந்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பாமகவினரிடம் எப்படி வசூலிப்பது என்பது குறித்து அரசு அதிகாரி விளக்கினார்.

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாமகவின் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. அப்போது மரக்காணம் பகுதியில் பாமகவினரால் கலவரம் ஏற்பட்டது. இதில் அரசு பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் பாமகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை நடத்த கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த வன்முறை சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், டாஸ்மாக் கடைகள், பாலம், சாலைகளை பாமகவினர் சேதப்படுத்தினர்.

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய பாமகவினரிடம் நஷ்டஈடு பெறப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பாமகவினர் மீது சுமார் ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக சுமார் ரூ.150 கோடி அளவுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வருவாய் நிர்வாகத்துறை அலுவலகம் சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக 87 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகள் மீதும் விசாரணை நடத்தி நஷ்டஈடு பெற வருவாய் நிர்வாகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஒருவரிடம் எப்படி நஷ்டஈடு பெறப்படும் என்பது குறித்து வருவாய் நிர்வாக உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தால், அந்த கண்ணாடியை உடைத்த நபர் மீது போடப்பட்ட எப்ஐஆரின்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியின் மதிப்பு 5 ஆயிரம், அந்த கண்ணாடியை மீண்டும் பொருத்துவதற்கு 700 கூலி என்று கணக்கிட்டு ரூ.5,700 நஷ்ட்டு வழங்க சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று டாஸ்மாக் கடையில் உடைத்த பாட்டில்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பு கணக்கிட்டப்பட்டு நஷ்ட்டு பெறப்படும். பேருந்துக்கு தீ வைத்த வழக்கில் ஒருவர் குற்றம்சாற்றப்பட்டிருந்தால் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வேண்டும்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு வரும் 30 ஆம் தேதி முதல் விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். குற்றம்சாற்றப்பட்டவர்கள் இந்த சேதத்துக்கு இவ்வளவு மதிப்பு கிடையாது என்று மறுப்பு கூறுவார்கள். விவாதத்துக்கு பிறகு வருவாய் நிர்வாக ஆணையர் ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுவார். அந்த தொகையை கண்டிப்பாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் மேல் முறையீடு செய்ய முடியாது, கண்டிப்பாக அபராத தொகை செலுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago