முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2026      தமிழகம்
CM-2-2026-01-12

சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது தி.மு.க. என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மொழி உரிமைக்காக... 

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் - 2026 விழாவில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று, அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ”தமிழர்கள் கனவு கண்டால், அதை நாம் அடைந்தே தீருவோம். மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது தி.மு.க., நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாய் வாழ்வோம்.

யாராலும் பிரிக்க.... 

உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும், யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள். நாடுகளும் கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. கீழடி கண்டுப்பிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

தகுதியை இழப்போம்...

மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும், அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம். வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம். வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மொழிப்பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது. 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது. 

தமிழ் வளர்ச்சிக்காக....

நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை. வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பாதிக்கக்கூடாது... 

 

இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து