மேற்குவங்கத்தில் இன்று 5-வது கட்டத்தேர்தல்

west bengal map s 5

 

கொல்கத்தா,மே.7 - மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைக்கு இன்று 5-வது கட்டமாக 34 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுவை, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களோடு மேற்குவங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்குவங்கம் மாநிலம் பெரியதாக இருப்பதாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அந்த மாநிலத்தில் சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முதல் கட்டமாக 50 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக 54 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக 75 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 4-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதுவரை 242 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இன்று 5 -வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதிகள் உள்ள பகுதிகளில் நக்சலைட்கள்,மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருப்பதால் தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருக்கு உதவியாக மத்திய ரிசர்வ் படையினர் அதிக அளவில் அனுப்பப்பட்டுள்ளனர். 34 தொகுதிகளிலும் 292 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்