முக்கிய செய்திகள்

துபாயில் மற்றொரு இந்தியர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
no image 40

 

துபாய்,மே.17 - துபாய் நாட்டில் ஜூமைரா லேக் டவர் என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் 30 வது மாடியில் இருந்து குதித்து 45 வயதான ஒரு மூத்த இந்திய அதிகாரி ஒருவர் பலியானார். கடந்த வாரம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கலிபா என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 148 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்ததே. இந்த கட்டிடம் உலகின் மிகப் பெரிய கட்டிடமாக கருதப்படுகிறது. இதில் இருந்து குதித்து அந்த தமிழர் பலியானார். அவரிடம் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தாம் இப்படி செய்ததாக அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாகவும் அவர் பலியானார். இந்த நிலையில் ஷார்ஜாவிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

26 வயதான ஒரு இந்திய ஊழியர் தனது வீட்டின் சீலிங் பேனில் தூக்கில் தொங்கினார். துபாயில் கடந்த 2009 ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: