முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

புதன்கிழமை, 5 மார்ச் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் .6 - ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சிக்கு  வெற்றிவாய்ப்பு  அதிகம் உள்ளதாக கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. பாராளுமன்ற தேரதலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி  கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதை  தனியார் டி.வி. நிறுவனம் வெளியி்ட்டது.      ஆந்திராவில் மொத்தம் 42பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது தேர்தல் நடந்தால் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 17  இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சிக்கு 10 முதல் 16 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 6 முதல் 12 இடங்கள், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு 6 முதல் 12 இடங்களும் கிடைக்கும். ஆந்திர மாநில பிரிவினை காரணமாக சீமாந்திராவில் 25 தொகுதிகளும், 175 சட்ட சபை தொகுதிகளும் உள்ளன. இதில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனி செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த தேர்தலில் ஜெகன் மோகனுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

தெலுங்கு தேசம் கட்சிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைக்கும். சீமாந்திரவில் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதம், பாஜகவுக்கு 3 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். பிரதமர் பதவிக்கு யார் தகுதியானவர் என்ற  கேள்விக்கு பலர் மோடியை கூறியுள்ளனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு  வாக்குகள் கிடைக்கும். சட்ட சப தேர்தலில் ராஷ்ட்ரீய  சமிதி கட்சிக்கு42 சதம் வாக்குளும், காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கும்.  பாஜகவுக்கு 6 சதவீதமும், ஜெகன் மோகன் கட்சிக்கு 2 சதம் வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                   

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago