முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரிக்கு விண்ணப்பங்கள் பெறுபடுகிறது

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் படிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுகிறது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை-113-ல் 2011-12-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில், முழு நேர 3 ஆண்டுகளுக்கான கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள பட்டயப் படிப்புகளி சேர, மாணவ, மாணவியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பட்டயப் படிப்பு விவரம்:-

 

1. இயக்குதல், திரைக்கதை வசனம் எழுதுதல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம், 2. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு), 3. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (படம் பதனிடுதல்), 4. திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியில்), 5. படத்தொகுப்பு மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம்.

கல்வித்தகுதி:-

வரிசை எண்.1-ன் பட்டயப் படிப்பிற்கு அங்கீகாரம், பெறப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வரிசை எண்.2 முதல் 4 முடிய பட்டயப் படிப்புகளுக்கு, மேல் நிலை கல்வித் தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) மின்னியல் மற்றும் மின்னணுவியல் (உஉஉ) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு பொறியியல் (உஇஉ)  பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி மற்றும் வரிசை எண்.5-ன் பட்டயப் படிப்பிற்கு மேல்நிலை கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களின் விற்பனையின் கடைசி நாளான 6.6.2011 நீட்டிக்கப்பட்டு, விண்ணப்ப படிவங்கின் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 17.6.2011 மாலை 5.00 மணிக்குள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி செய்தி குறிப்பை முதல்வர், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!