முக்கிய செய்திகள்

ரஜினிக்கு வழங்கப்படும் சிகிச்சையில் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.3 - நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 24 ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அஜீரண கோளாறு, நுரையீரல் நீர்கோர்ப்பு பிரச்சினைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரத்தத்தை சுத்திகரிக்கும் டயாலிசிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. சிறு அறுவை சிகிச்சை மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பும் அகற்றப்பட்டது. மேலும் நவீன சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் உறுதிப்படுத்தினார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உணவு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. ஊட்டச் சத்து உணவுகளும் வழங்கப்படுகின்றன. ஆஸ்பத்திரியின் உள்ளேயே வாக்கிங் செல்வதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: