முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ அறிக்கை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானம் உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்விதமாக உள்ளதாகவும், அதை வரவேற்பதாகவும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. மன்றம் போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தாய்த் தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்