முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பஸ் விபத்து 22 பயணிகள் பலி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இரங்கல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - சென்னையிலிருந்து திருப்nullருக்கு குளிர்சாதனம் செய்யப்பட்ட ஆம்னி பஸ்ஸில் 7.6.2011 அன்று இரவு பயணம் செய்த 22 பேர்கள் இரவு 11 மணிக்கு காவேரிப்பாக்கம் அருகே சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி நிலை தடுமாறி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் அந்த பஸ்சில் இருந்த குளிர்சாதன இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. அந்த நள்ளிரவில் பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியாமல் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நான் அரசு நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் இத்தகைய தனியார் சொகுசு வண்டிகள் இரவு நேரங்களில் படுவேகமாகச் சென்று குறித்த நேரத்தில் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். எனவே அரசு இதில் அக்கறை கொண்டு இத்தகைய பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு சாதனத்தை பொருத்தினால் இத்தகைய விபத்துகள், அதன் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைய வாய்ப்புகள் ஏற்படும்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் இன்றைய தினம் நடைபெற இருக்கின்ற திருமணத்திற்கோ அல்லது வேறு ஏதோ அவசர நிமித்தமாகவோ பயணம் செய்து இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. விபத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களது ஆன்மாக்கள் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago