முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு இந்தியா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு,ஜூன்.- 13 - இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் ரீதியான தீர்வு காணுமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.  இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்திய குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசிய போது இக்கருத்து இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987 ம் ஆண்டே 13 வது சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாக தெரிகிறது என்று சிவசங்கர் மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியா - இலங்கை அமைதி உடன்பாட்டிலும் இக்கருத்து எட்டப்பட்டது. ஆனால் தனித் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையால் இது கைவிடப்பட்டது. இப்போது முந்தைய உடன்படிக்கையை மேம்படுத்தி அமுல்படுத்தும் என நம்புவதாக அவர் கூறினார்.
அதிபர் ராஜபக்சேவுடன் 2 மணி நேரம் இக்குழுவினர் சந்தித்து பல விஷயங்கள் குறித்து விரிவான பேச்சு நடத்தினர். முன்னதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்சையும் இந்திய குழுவினர் சந்தித்து பேசினர். இவர்கள் தவிர தமிழ் தலைவர்களையும் இவர்கள் சந்தித்து பேசினர். தமிழக சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பில் இக்குழுவினர் இலங்கை சென்று பேச்சு நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்