முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கல்லூரிகளில் சேர கட்-ஆப் மார்க் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூன்.16 - தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரிகளில் சேர அதிக கட்-ஆப் மார்க் வைத்திருப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா பெரும் கவலையை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் இரண்டு மகன்கள் டெல்லியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களில் ஒரு மகன் இன்னும் 5 ஆண்டுகளில் கல்லூரியில் சேர உள்ளான். ஆனால் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைக்க கட்-ஆப் அதிக அளவு உயர்த்தியிருப்பதால் இப்போதே உமர் அப்துல்லா தனது கவலையை தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் சேர 100-100 மார்க்குகள் கட்-ஆப் ஆக வைத்திருக்கிறார்கள். இது பெரிய குழப்பமாக இருக்கிறது. எல்லா குழந்தைகளும் 100-க்கு 100 மார்க்குகள் வாங்கு முடியுமா என்று உமர் தனது கவலையை தெரிவித்துள்ளார். நல்லவேலையாக நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடித்துவிட்டேன். இப்போது கல்லூரி படிக்க வேண்டுமென்றால் அதிக கட்-ஆப் மார்க் தேவை. இந்த கட்-ஆப் மார்க் அப்போதே இருந்திருந்தால் நான் அஞ்சல்வழி மூலமாகத்தான் கல்லூரி படிப்பை படித்திருக்க முடியும் என்றும் உமர அப்துல்லா மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்