முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரகத் தொழில்துறை அமைச்சர் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 7 - ஊரகத் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு நேற்று ஜூலை 6-ம் தேதியன்று தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை அதன் தலைமை அலுவலகத்தில் மேற்கொண்டார். கிண்டி தொழிற்பேட்டையில் அரசுத் துறைகளுக்கும், அரசுடமை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நில விவரங்கள் குறித்தும், காலியாக உள்ள மனைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிண்டி தொழிற்பேட்டையின் உட்கட்டமைப்பு பராமரிப்பு குறித்தும் அங்கு இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திகள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் வினவினார். மேற்கண்ட விவரங்களை அனைத்து தொழிற்பேட்டைகளிலும் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிந்தார்.
கிண்டி தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் சிட்கோ தலைமை அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதன் பணிகளை விரைவுபடுத்தவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறும் பணித்தார். கட்டுமன பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அனைத்து தொழிற்பேட்டைகளிலும் நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு அதனை விரைவாக உரிய காலத்திற்குள் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
இந்நிறுவனம் தவிர கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி), தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசுடமை நிறுவனங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும், தொழில் வணிகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனரும், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலவர் மற்றும் நிர்வாக இயக்குனரும் மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago