முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்:வரும் 15 ம் தேதிக்குள் அறிக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.- 9 - நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பிக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை இம்மாதம் 15 ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு டெல்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது கடந்த 2008 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் பேரில் கடந்த 2008 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசு வெற்றி பெற்றது.
இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு வாக்களிப்பதற்காக எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறி பா.ஜ.க எம்.பிக்கள் மூன்று பேர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை நாடாளுமன்றத்தில் காண்பித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ எம்.பிக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதே போல் கிஷோர் சந்திர தியோ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் இநத குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.  நீதிபதி அப்தால் ஆலம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது நீதிபதி முன் ஆஜராகி பதிலளித்த சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 2 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
இதில் திருப்தியடையாத நீதிபதிகள் இரண்டு மாதங்கள் என்பது மிகவும் அதிகம். வரும் 15 ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அது குறித்த அறிககையையும் அன்றே சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் 15 ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago