முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசுடன் மீண்டும் உறவை ஏற்படுத்த லல்லு தீவிர முயற்சி

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 11 - காங்கிரசுடன் மீண்டும் உறவை ஏற்படுத்திக்கொள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தீவிர முயற்சியை மேற்கொண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.  காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், கடந்த லோக்சபை தேர்தலின்போது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். இதில் லல்லு கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. அதனையடுத்து நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிட்டது. அதிலும் லல்லு கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. அப்போதுதான் லல்லுவுக்கு ஞானோதயம் பிறந்தது. இனிமேல் தேசிய கட்சி கூட்டணி இல்லாமல் பீகாரில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கருதினார். அதனால் காங்கிரசுடன் மீண்டும் உறவை ஏற்படுத்திக்கொள்ள தக்க தருணத்தை லல்லு எதிர்பார்த்துக்கொண்டியிருந்தார். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. இடையே உறவு பாதித்துள்ளது. மேலும் மம்தா பானர்ஜியும் அடிக்கடி மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அதனால் மத்திய அரசுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க லல்லுவின் உதவியை சோனியா காந்தி நாடியதாக தெரிகிறது. இதனையொட்டி சோனியா காந்தியை லல்லு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. விலகும்பட்சத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை பெருக்குவது குறித்து இருவரும் விவாதித்தாக தெரிகிறது. இந்த விவாதத்தின்போது சமாஜ்வாடி கட்சியின் முழு ஆதரவை பெறுவதில் உதவுமாறு லல்லுவை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு காங்கிரசுடன் மீண்டும் உறவை வளர்த்துக்கொண்டு பீகார் மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்க லல்லு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பீகார் மாநிலத்தில் முதல்வர் நீதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அரசை நீக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஷ் பிரசாத் சிங் கூறியுள்ளார். காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்தும்படி ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினர்களை லல்லு கேட்டுக்கொண்டுள்ளார். சோனியா காந்தியை சந்தித்தபோது பீகாரில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று லல்லு புகாரும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!