முக்கிய செய்திகள்

பிரேசில் விமானம் வெடித்ததில் 18 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

பிரேசிலியா, ஜூலை 15 - பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் 16 பேர் உடல் கருகி பலியானார்கள். பிரேசில் நாட்டில் அதிகமான சுற்றுலா மலைவாசஸ்தலங்கள் உள்ளன. இதனால் இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்துசெல்கின்றனர். பிரேசில் நாட்டில் உள்ள ரெசீப் என்ற நகரில் இருந்து நேட்டால் என்ற சுற்றுலா தலத்திற்கு 19 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் ரெசீப் விமான நிலையத்தை நோக்கி திரும்பியது. அப்போது அந்த விமானத்தை விமானி அவசரமாக வெட்ட வெளியில் தரையிறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த விமானம் வெடித்து தீப்பிடித்து தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிலிருந்து 18 பயணிகளின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த  பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது. விமானத்தில் கடைசியாக என்ன நடந்தது என்பது குறித்து தகவல்களை அறிவதற்கு பயன்படும் விமானத்தின் கறுப்பு பெட்டியை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். அந்த கறுப்பு பெட்டி விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் ஒரு தனியார் விமானக் கம்பெனியால் புதிதாக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: