முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது ? சீனா

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூலை.19 - சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா என்று கூறி அமெரிக்க நாட்டின் தூதரை அழைத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆன்மீக தலைவர் தலாய்லாமா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சீனாவில் உள்ள அமெரிக்க தூதரக உயரதிகாரியை அழைத்து சீனா தனது கண்டனத்தை தெரிவித்தது. சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் சூ தியாங்க், பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரக வெளியுறவு துறை பொறுப்பாளர் ராபர்ட் வாங்க்கை அழைத்து கடும் கண்டனத்தை தெரிவித்தார். 

தலாய்லாமாவை ஒபாமா சந்தித்திருப்பது சீன நாட்டு உள் விவகாரத்தில் தலையிடுவது ஆகும். மேலும் இது சீனா, அமெரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது சீன மக்களின் உணர்ச்சிபூர்வமான பிரச்சினை. அதில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இதை சீன மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று அப்போது அவர் தெரிவித்ததாக சீன நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மாஸ்ஹா ஓக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!