முக்கிய செய்திகள்

சீனாவில் புல்லட் ரயில்கள் மோதல் 40 பேர் பலி: காயம் 250

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,ஜூலை.- 25 - சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிவேக (புல்லட் ரயில்) புல்லட் ரயில்கள் ஒன்றுக்கொன்று நேர் எதிரே மோதிக்கொண்டதில் 40 பேர் பலியானார்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  சீனா அனைத்து துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் புல்லட் ரயில்களை போக்குவரத்துக்கு பயன்படுத்த தொடங்கியது. இந்த புல்லெட் ரயில் ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் சென்றடையும். அதாவது மணிக்கு சுமார் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயிலை கடந்த மாதம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கும் தொழில் நகரான ஷாங்காய் நகருக்கும் இடையே சீனா இயக்கியது. இது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் சீனா தனது நாடு முழுவதும் புல்லட் ரயில்களை விடுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டது.
இந்தநிலையில் புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒருமாத காலம் கூட ஆகவில்லை. அதற்குள் புல்லட் ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி கவிழ்ந்தன. இதில் 40 பேர் பலியானார்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நேற்றுமுன்தினம் மாலையில் நடந்துள்ளது. ரயிலானது ஹாங்ஜோவ்-புஜோவ் மாகாணங்களுக்கிடையே உள்ள 20 மீட்டர் உயரத்தில் புல்லட் ரயில் சென்று கொண்டியிருந்தது. அப்போது திடீரென்று மின்னல் ஏற்பட்டது. இதனால் ரயிலில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மற்றொரு ரயில் மீது புல்லட் ரயில் பயங்கர மோதியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. மேலும் புல்லட் ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் அச்சம் கொண்டியிருப்பதாகவும் தெரிகிறது. அதனால் புல்லட் ரயில் விரிவாக்க பணிகளை நிறுத்திவைப்பது குறித்து சீனா அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: