முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்: காங். எம்.பிக்கள்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.29 - தனித் தெலுங்கானா கோரி ராஜினாமா கடிதங்கள் கொடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கடிதங்கள் ஏற்கப்படாத நிலையில் தெலுங்கானா மாநில அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் வரும் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெலுங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பிக்கள் அறிவித்துள்ளனர். 

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் 100 பேர் கட்சி வேறுபாடின்றி ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார். 

இந்த நிலையில் தெலுங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பிக்கள் ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் ஆந்திராவுக்கு கட்சி மேலிட பொறுப்பாளராக உள்ள குலாம் நபி ஆசாத்தை தொடர்பு கொண்டு தெலுங்கானா குறித்து மத்திய அரசு அறிவிக்காவிட்டால் தாங்கள் உறுதியாக பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணிப்போம். கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 

தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் மட்டுமே பெரிய நகரம். சேமந்திரா பகுதியில் விஜயவாடா, விசாகப்பட்டினம், குண்டூர், திருப்பதி போன்ற பெரிய நகரங்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை தெலுங்கானா அல்லாத மாநிலத்துக்கு தலைநகரமாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்