முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மலைக் கோட்டையில் பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி, செப்.- 2 - நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டு சுவாமிக்கு விஷேச பூஜை நடத்தப்பட்டது.  எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகரை வழிப்பட்டு தொடங்கினால் அந்த காரியம் நல்லப்படியாக அமையும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். இதனால் விநாயகரை இந்து மக்கள் அதிக அளவில் வழிபடுவர். இதனால் தெருவிற்கு தெரு விநாயகர் கோவில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு  ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாப்படுகிறு. குறிப்பாக வடமாநில நகரங்களான மும்பை, டெல்லி, உள்ளிட்ட பல பகுதிகளில்  பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. பின்னர் 3-ஆம் நாள் ஊர்வலமாக விநாயகரை எடுத்துச்சென்று ஆற்றில் கரைப்பது வழக்கம்.
நேற்று விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டியில் நேற்று அதிகாலை  4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிப்பட்டனர்.
இதே போல் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
நேற்று மாணிக்க விநாயகர், மற்றும் உச்சிபிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய், சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய், ஆகியவற்றை கொண்டு 150 கிலோ எடையுள்ள ஒரே கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு படைக்கப்பட்டது. பின்னர் அது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
உற்சவர், பாலகணபதி, லட்சுமிகணபதி, பஞ்சமுக கணபதி, ராஜகணபதி, மயூரா கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர் கணபதி, சித்தி புத்தி கணபதி, நடன கணபதி, அலங்காரங்களின் தினமும் 8 மணிக்கு விநாயகர் வீதிவுலா வந்து அருள்பாலிக்கிறார். இறுதி நாளான 13-ம் தேதி மாணிக்க விநாயகர் உற்சவருக்கு 28 வகை அபிஷேகம் நடைபெற்றது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்