முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      தமிழகம்
Kanimozhi

சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாடக விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியினை கண்டுகளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: அறம் என்று சொல்லும்போது, நாம் தப்பாக வேற எந்த அறத்தையும் நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், இந்த காலத்திலும் அறம் அறம் என்று சொல்லி நம்மை நிறைய மண்டையை கழுவிக் கொண்டே இருந்தாங்க. அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, அறம் என்று சொல்லுவது மனிதநேயம்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காரல் மார்க்ஸும் சொன்னதுதான் ‘அறம்’. மனிதனை நேசிக்கக் கூடியதுதான் அறம். ஒரு பெண்ணுக்கு அழகான வசனமாக, இந்த நாடகத்தின் இறுதிக் கட்டத்தில் மணிமேகலை சொல்வது போல; “என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய உரிமை எனக்கு இல்லை” என்று நீ எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு அந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது என்று நாம் புரிந்து கொண்டோம் என்றால் நிச்சயமாக இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் என்பது இருக்கவே இருக்காது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து