முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே குழுவினர் வசூலித்த நன்கொடை 2.51 கோடி

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.3 - அன்னா ஹசாரே குழுவினர் தங்களது ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு வசூலித்த மொத்த நன்கொடை பணம் ரூ.2.51 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் ரூ. 4 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் இந்த அளவுக்கு நன்கொடை வழங்கியவர் இவர் மட்டுமே என்று கூறப்படுகிறது. ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்காக அவர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இவரது இயக்கத்தில் பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும் இடம் பெற்றுள்ளார்.

அன்னா ஹசாரே குழுவில் அங்கம் வகிக்கும் சாந்தி பூஷன் ரூ. 4 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இவர் தனது சொந்த பணத்திலிருந்து இந்த தொகையை வழங்கியிருக்கிறார்.

அன்னா ஹசாரே குழு இது வரை ரூ. 2.51 கோடியை திரட்டியுள்ளது. இந்த தொகையில் சாந்தி பூஷன் அளித்த நன்கொடையும் உள்ளடங்கும்.

இந்த ரூ. 2.51 கோடி நன்கொடைகளும் கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி முதல் திரட்டப்பட்ட தொகையாகும்.

ஹசாரே குழுவுக்கு அதிகமான நன்கொடையை வழங்கியிருப்பவர் சீத்தாராம் ஜிண்டால்.  ஜிண்டால் அலுமினியம் லிமிடெட் கம்பெனியை சேர்ந்த இவர் மட்டும் ரூ. 25 லட்சத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இதுவரை அன்னா ஹசாரே குழுவுக்கு 27,505 பேர் நன்கொடைகளை வழங்கியிருக்கிறார்கள். இவர்களில் 25,023 பேர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது  தங்களது நன்கொடைகளை அளித்துள்ளனர்.

சுமார் 400 பேர் ரூ. 10,000 க்கும் அதிகமான தொகைகளை வழங்கியுள்ளனர்.

ஆன்லைன் பரிமாற்றங்கள், காசோலைகள், ரொக்கம்,  பண விடை என்று பல்வேறு வகையான பரிமாற்றங்கள் மூலம் அன்னா ஹசாரே குழுவினருக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன.

மொத்தம் வசூல் செய்த தொகை ரூ. 2.94 கோடி. இதில்  சரியான தகவல்களை தெரிவிக்காததால் ரூ. 42.55 லட்சம் நன்கொடை வழங்கியவர்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இந்த  தகவலை அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்