அத்வானியின் ரத யாத்திரை நாளை ராஜஸ்தான் செல்கிறது

Image Unavailable

 

ஜெய்ப்பூர், நவ.- 8 - அத்வானியின் ரத யாத்திரை நாளை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைகிறது. இம்மாநிலத்தில் அத்வானி 8 மிகப்பெரிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் 38 நாள் ரத யாத்திரையை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்கிறார். வருகிற 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அவர்  ராஜஸ்தானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது குறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஸ் பூனியா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ராஜஸ்தான் மாநிலத்தில்  27 மாவட்டங்களிலும்,  6 எம்.பி.தொகுதிகளிலும்  அத்வானி ஊழலுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்ய இருக்கிறார் என்று கூறினார். நவம்பர் 12-ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அத்வானியுடன் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் பங்கேற்கிறார். ராஜஸ்தானில் அத்வானியின் ரத யாத்திரையில் மாநில பா.ஜ.க தலைவர் அருண் சதுர்வேதி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வசுந்தரா ராஜே ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். முதல் பொதுக்கூட்டம் 9-ம் தேதி ஜோத்பூரில் நடக்கும் என்றும் அவர் கூறினார். அத்வானியின் ரத யாத்திரைக்காக ராஜஸ்தானில் ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ