வெளிநாட்டு வங்கி கணக்கு: சி.பி.ஐயிடம் புகார்: சுவாமி

Image Unavailable

கொல்கத்தா, நவ. - 8 - வெளிநாடுகளில் சட்ட விரோதமாக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பிடம் புகார் அளிக்கப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். தனது தலைமையில் செயல்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குழு சார்பில் இந்த புகார் மனு இன்னும் இரு வாரங்களுக்குள் அளிக்கப்படும். பெயர் தெரியாதவர்களுக்கு எதிரான தங்களது புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சி.பி.ஐ. மறுத்தால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ