எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத், நவ. - 8 - தனித் தெலுங்கானா கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோமதிரெட்டி வெங்கடரெட்டி போலீசாரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமதிரெட்டி கடந்த 1 ம் தேதி முதல் தனித் தெலுங்கானா கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது குறித்து அறிந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரவீந்திரரெட்டி, கோமதி ரெட்டியை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். கோமதி ரெட்டி மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி போலீசார் அவர்களை ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் கோமதிரெட்டியின் சிறுநீரில் கீட்டோன் அளவு அதிகரித்தும், பொட்டாசியம் அளவு குறைந்தும் காணப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கு தகுந்த சிகிச்சையும் உடனடியாக அவருக்கு வழங்கப்பட்டது. உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுதாகர்ரெட்டி, கோமதி ரெட்டியின் உண்ணாவிரதம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலர் அகமது பட்டேலுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பியான சுசேந்தர் ரெட்டி கூறுகையில், விரைவில் தெலுங்கானா குறித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசை கோரியுள்ளதாக தெரிவித்தார். கோமதிரெட்டியின் உண்ணாவிரதத்துக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி மற்றும் தெலுங்கானா கூட்டு போராட்ட குழுவினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025