முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் திறனாய்வு

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 12 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தலைமையில் நலிவடைந்த நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இதுகுறித்த விபரம் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நேற்று (11.11.2011)  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில் நலிவடைந்த நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் நலிவுற்ற  தொடக்கக் கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலைகள் செயல்பாடுகள் குறித்தும், குவிந்த நட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்த திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் பொதுமக்களுக்குத் தரமான பொருள்களை நியாயமான விலையில் சரியான எடையில் வழங்குகின்றன. சில தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் நிதி பற்றாக் குறையினால் நலிவடைந்துள்ளன.  அவற்றை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வட்டத் தலைமையகங்களில் மருந்தகங்கள் தொடங்குதல், கொள்முதல் கொள்கை, புதிய பொருள்களை அறிமுகப்படுத்துதல், அனைத்துப் பண்டக சாலைகளிலும் ஒரே விலையில் பொருள்களை விற்பனை செய்தல், விலை நிலை நிறுத்தும் நிதியின் பயன்பாடு குறித்தும், புதிய  விற்பனை முயற்சி குறித்தும்  அமைச்சர் ஆய்வு செய்தார். மேற்கூறிய இலாபகரமான வர்த்தக உத்திகளை மேற்கொள்ளும்போது நட்டமடைந்த சில பண்டகசாலைகளும் இலாபம் ஈட்ட உதவும் எனத் தெரிவித்தார். பின்னர், மாநிலத்தில் உள்ள 26 கூட்டுறவு அச்சகங்களில் குவிந்த நட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சரால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, கூட்டுறவு அச்சகங்களில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகள், அச்சகங்களை நவீனமயமாக்குதல், அச்சகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்ப யுத்திகள், அச்சகங்களின் இலாப விவரம், வணிக மேம்பாட்டிற்காக இனிவரும்  காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிக அளவில் அச்சுப் பணிகள் மேற்கொள்ளவும், நட்டத்தில் செயல்படும் அச்சகங்களும் இலாபத்தில் இயங்கிட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என  அமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ப.அண்ணாமலை,  கூடுதல் பதிவாளர்கள் அசோகன், எம்.தருமலிங்கம் மற்றும் இணைப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!