எரிபொருள் விலை உயர்வை இனி தாங்க முடியாது : தினேஷ் திவேதி

Image Unavailable

புதுடெல்லி, நவ.- 13 - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்களின் விலையும் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். எரி பொருள் விலை உயர்வை ரயில்வேயால் இனிதாங்க முடியாது. இதன்மூலம் எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் ரயில் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவினை வாபஸ் பெறப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் எரிபொருள் உயர்வு குறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ழர் எரிபொருள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ளது என தெரிவித்தார். இந்த விலை உயர்வினால் ரயில்வே துறையும் பாதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் எரி பொருள் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில்வே கட்டணங்களை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் சமயங்களில் ரயில்வே கட்டணம் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இது குறித்து ரயில்வே துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ