முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மன்மோகன் சந்திப்பு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலி, நவ.19 - இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 17 ம் தேதி இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். ஆசியான் உச்சிமாநாட்டில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களும், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த உச்சி மாநாட்டின் புற நிகழ்வாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். 

பிறகு இவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தாகியுள்ள ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தத்தை  தீவிரமாக அமுல் படுத்துவது குறித்து தாங்கள் பேசியதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் வர்த்தகம், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாகவும் அவர் கூறினார். இந்த சட்டம் இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பான சில கவலைகளை ஒபாமாவிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் சிங் கூறினார். 

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பாக தங்களிடம் ஏற்கனவே சில சட்டங்கள் இருப்பதாகவும், சில சட்ட விதிகளை புதிதாக உருவாக்கியுள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். சில  சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன என்றும் அணுசக்தி பாதுகாப்பு குறித்த கவலை அமெரிக்க கம்பெனிகளுக்கு தேவையில்லை என்றும் ஒபாமாவிடம் எடுத்துக்கூறியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, இந்தியாவுடன் அனைத்து அம்சங்களிலும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது என்று ஒபாமா கூறினார். இந்தியாவுடன் இருதரப்பு உறவுகள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பன்முக அம்சங்கள் குறித்து நெருக்கமான உறவை வைத்துக்கொள்வதையே அமெரிக்கா விரும்புகிறது என்றும் அவர் கூறினார். 

கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மன்மோகன் சிங்கை ஒபாமா சந்தித்து பேசினார். அதன்பிறகு இப்போதுதான் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis