இந்தியா - சீனா அடுத்த மாதம் பேச்சு

Image Unavailable

புது டெல்லி, நவ. - 21 - இந்தியாவும், சீனாவும் அடுத்த மாதம் 9 ம் தேதி தங்களது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவிருக்கின்றன. அப்போது கூட்டாக ராணுவ பயிற்சி செய்வது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது ராணுவ கூட்டு பயிற்சியை தொடர்வது குறித்து ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் டெல்லியில் தெரிவித்தனர். முன்னதாக இந்த பேச்சுவார்த்தையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது டிசம்பர் மாதத்திலேயே நடத்தி விடுவது என்று கூட்டாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் ஷர்மா தலைமை தாங்குவார். சீன தரப்புக்கு அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள். கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெய்ஜிங் நகரில் இந்தியா - சீனா இடையே கடைசி சுற்று பேச்சுவார்த்தை நடந்தது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ