முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

பிரஸ்சல்ஸ், டிச.4 - சிரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கடுமையாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சிரியா அதிபர் அல்பஜாரின் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்குமான மோதலில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. போராட்டம் தீவிரமடைந்து இருக்கும் இடங்களில் அரசு படை தாக்குதலில் 16பேர் உயிரிழந்ததாகவும், 20 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை மேலும் அதிகரிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. சிரியா விஷயத்தில் எவ்வித சர்வதேச தலையீட்டையும் ஈடுபடுத்த அரபு லீக் முயலவில்லை என்ற மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார் அரபு லீக்கின் தலைவர் அராபி. அரபு லீக்கின் உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டு விஷயத்தை சர்வதேச பிரச்சினையாக்குகின்றன என்று சிரியா குற்றம் சாட்டியுள்ள நிலையில் அராபி இக்கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்