முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை விட்டும் தூவானம் விடவில்லை காங்கிரஸ்- தி.மு.க. மீண்டும் இழுபறி

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 14 ​- காங்கிரஸ்- தி.மு.க. பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் உள்ளது. மந்திரிகளின் தொகுதிகளையே காங்கிரஸ் கேட்பதால் தி.மு.க. கலக்கத்தில் உள்ளது.  இதுபற்றிய விபரம் வருமாறு:-

தி.மு.க.- காங்கிரஸ் உறவு சிக்கல் இடியாப்ப சிக்கலாக மேலும், மேலும் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆரம்பம் முதலே தி.மு.க.வை நெருக்கி ஓரம் தள்ளியே வைத்துள்ளது. தி.மு.க. என்னதான் பெரியண்ணன் ஜம்பம் காட்டினாலும் நடைமுறையில் காங்கிரஸ்தான் பெரியண்ணன் போக்கை காட்டி வருகிறது. வசமாக சிக்கிக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் நிலை வந்தது. ஆரம்பத்தில் 48, 51, 55, 57, 60 என விட்டு கொடுத்து வந்த தி.மு.க. தனது மந்திரிகள் நிற்கும் தொகுதிகள் உட்பட, தாங்கள் கைவசம் வைத்துள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால் கடும் ஆத்திரமுற்று முரண்டு பிடித்தது. ஆனால் காங்கிரஸ் இறங்கி வரவே இல்லை. முடிவு கூட்டணிமுறிவு அறிக்கை விட்டார்கள். பின்பு ராஜினாமா நாடகம் நடத்தினார்கள். டெல்லி சென்று காலில் விழுந்து, கையை பிடித்து ஒருவழியாக காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையே விட்டும் கொடுத்தார்கள். அதையும் கருணாநிதியின் ராஜதந்திரம் என்கிறார்கள். அதன் பிறகு 2 நாளில் தொகுதிகளை பிரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதுபோல் பம்மாத்து காட்டினார்கள். 

ஆனால் ஆரம்பம் முதலே காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. தாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று பிடிவாதமாக காங்கிரஸ் உள்ளதால் நேற்று வரை சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆலந்தூர்,  அம்பாசமுத்திரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட முக்கியமான தொகுதிகளை கேட்கிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க. மந்திரிகள் தொகுதி மற்றும் தி.மு.க. ஜெயிக்கும் என்ற நிலையில் உள்ள தொகுதிகள். 

இதனால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தி.மு.க. தவிக்கிறது. மேலும் காங்கிரஸ் கேட்கும் பல தொகுதிகள் கொங்கு முன்னேற்ற கழகத்தின் தொகுதிகளும் சில தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியினுடையதும் ஆகும். இதனால் கூட்டணி கட்சிகளை கேட்டுத்தான் தரமுடியும் என்று தி.மு.க. கூறி விட்டதாம். நேற்று காலை தி.மு.க.- காங்கிரஸ் குழுக்கள் கூடி தொகுதிகளை முடிவெடுத்து  முடித்து விடுவதாக தி.மு.க. குழு அமைக்கும் என்று காங்கிரஸ் ஐவர் குழு சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தது. ஆனால் கடைசிவரை தி.மு.க. அழைக்காததால் வெறுத்துப்போன சிதம்பரம் கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். முடிவில் முற்று பெறாமலேயே குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது. 

மொத்தத்தில் மழை விட்டும் தூவானம் விடாத குறையாக தி.மு.க.- காங்கிரஸ் பிரச்சினை தொடர்கிறது. இவர்கள் தொகுதிகளை பிரித்து பிரச்சாரத்திற்கு போனாலும் உள்குத்து, கழுத்தறுப்பு வேலையில் ஒருத்தரை ஒருத்தர் வெல்ல விடாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என்று தொண்டர் ஒருவர் கமெண்ட் அடித்தார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago