முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீது சீனா போர்தொடுத்தபோது இஸ்ரேல் உதவியை நேரு நாடினாரா?

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பதுடெல்லி,டிச.- 19 - கடந்த 1962-ம் ஆண்டின்போது இந்தியா மீது சீனா போர்தொடுத்தபோது இஸ்ரேலின் உதவியை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கோரினாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடு சீனா. இந்தியாவைக்காட்டிலும் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியது. சீனாவுக்கு அடுத்த பரபரப்பளவும் மக்கள் தொகையும் கொண்டது இந்தியா. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீனாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க அப்போது ஜவஹர்லால் பெரும் முயற்சி செய்தார். இதையெல்லாம் மறந்துவிட்ட சீனா, இந்தியா மீது கடந்த 1962-ம் ஆண்டு போர்தொடுத்த லட்சக்கணக்கான ஏக்கர் பரபரப்பளவு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதோடுமட்டுமல்லாது அந்த பகுதியில் ராணுவ வலிமையையும் பெருக்கி வருகிறது. போரின்போது சீனா நவீன் ஆயுதங்களை பயன்படுத்தியது. இந்தியாவில் அப்போது ராணுவ வலிமை குறைவாகவே இருந்தது. வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால் சீனாவை சமாளிக்க இஸ்ரேல் நாட்டின் உதவியை கேட்டு அந்த நாட்டில் அப்போது பிரதமராக இருந்த டேவிட் பென் குரியனுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தரும்படியும் அந்த கடிதத்தின் நகலை கொடுக்கும்படியும் மத்திய அமைச்சகங்களுக்கு சுபாஷ் அகர்வால் என்ற சமூக சேவகர் ஒருவர் கடிதம் எழுதினார். முதலில் வெளியுறவுத்துறைக்கு இந்த கடிதம் எழுதினார். உடனே வெளியுறவு அமைச்சகமானது மத்திய தகவல் கமிஷன் கமிஷனர் ஷலேஷ் காந்தியும் கடிதம் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் இஸ்ரேல் உதவியை குறிப்பாக கடிதம் மூலம் கேட்டாரா? இல்லையா என்பது குறித்து தஸ்தாவேஜூ ஆதாரம் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவு கொடுத்து வந்த இந்தியா, கடந்த 1992-ம் ஆண்டுதான் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்