முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை: திரிவேதியிடம் எம்.பிக்கள் வலியுறுத்தல்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டிச. - 21 - தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் தமிழக எம்.பிக்கள் அனைவரும் தனித்தனியாக கோரிக்கை விடுத்தனர். 2012 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் தங்கள் தொகுதிகளுக்கு தேவையான ரயில் திட்டங்களை வழங்க வேண்டும் என்று எம்.பிக்கள் ரயில்வே அமைச்சரை தனித்தனியாக சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான ரயில்வே திட்டங்களை பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து கோரிக்கை வைத்தனர். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கான ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும். தக்கோலத்தில் இருந்து அரக்கோணம் இடையே உள்ள நிலுவை ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் தடம் அமைக்க நிதி, திருமழிசை ஓரகடம் வழியாக ரயில் திட்டம், கும்மிடிபூண்டியில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும், திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்துக்கு 4 வது வழித்தடம் அமைக்க வேண்டும். சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், கும்மிடிபூண்டி இடையே ரயில் சேவையை அதிகரித்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் திட்டங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திரிவேதி உறுதியளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்