முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

585 மாணவ. மாணவியர்களுக்கு மிதிவண்டிகளையும், .எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

கோவை, ஜன.- 7 - கோவை மாநகராட்சி இராம்நகர்   சபர்பன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை பத்திரம் வழங்கும் விழா இன்று (04.01.2012) நடைபெற்றது.   இவ்விழாவில்,   மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு 200 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், 585 மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கல்வி ஊக்கத் தொகை பத்திரங்களையும் வழங்கினார். வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திரு.செ.ம.வேலுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள்  தேர்தலின்போது சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகின்றார்கள். கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்;.  விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், பாடப்புத்தகம் வழங்கும் திட்டம், சீருடை வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 200 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும்,  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 585 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.9,65,500- மதிப்பிலான சிறப்பு கல்வி ஊக்கத்தொகை பத்திரங்களும் வழங்கப்படுகிறது.  சிறப்பு கல்வி ஊக்கத்தொகை மாணவ, மாணவியர்கள் குடும்ப வறுமையின் காரணமாக இடைநிறுத்தம் இல்லாமல் சிறப்பாக படிக்கவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன் அவர்கள் மிகவும் சிறப்பானவர்.  அவரிடம் படிக்கும் நீங்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும்.  அரசு உங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.  சிறப்பாக கல்வி கற்று பெற்றோருக்கும், நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும், பெருமைதேடித்தர வேண்டும்.  கல்வியின் மூலம் உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.  இவ்விழாவில், கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.துரை (எ) சேலஞ்சர்துரை, கோவை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் திரு.ஜெயராமன், திரு.பெருமாள்சாமி, பள்ளிக் கல்விக் குழு தலைவர் திரு.என்.வி.நாகசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஜே.அசோக்குமார், சபர்பன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு.ஜி.சுப்பிரமணியன், உதவி தலைமையாசிரியர் திரு.யு.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago