எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், ஜன.- 9 - விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்துநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், 480 மாணவிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கிராமப்புறங்களில் ஏழ்மையில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பல்வேறு குடும்பசூழ்நிலைகளின் காரணமாக பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்து விட்டு மேல்நிலைக்கல்வி படிக்க முடியாத நிலையை தடுப்பதற்காகவே 2001-2006 ம் ஆண்டுகளில் விலையில்லா மிதி வண்டிகளை வழங்க உத்தவிட்டதற்கினங்க இக்கல்வி ஆண்டில் விருதுநகர் மாவட்டதில் 20,868 மாணவ மாணவியர்குளுக்கு ரூபாய் 6 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கபட்டு வருகிறது. இதனால் படிக்கின்ற மாணவ மாணவியர்களின் கல்வித்தரமும் மேல்நிலைகல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் அவர்கள் நகர்புறங்களில் வசதியான குடும்பத்தில் பிறந்து படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து வசதிகளும் வறுமையில் வாடுகின்ற கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைப்பதற்காகவே விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததன் காரணமாக கிராமப்புறத்தில் பயிலும் மாணவர்கள் உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதைப்போன்று பெண்களை குறைந்தது பத்தாம் வகுப்பு வரையும் அதிக பட்சமாக பட்டம் மற்றும் பட்டய படிப்பு வரை வரையிலும் படிக்க வைக்கவேண்டும் என்ற உயந்த நோக்கத்திற்காகவே பத்தாம் வகுப்பு வரை பயின்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி தொகையாக 25 ஆயிரமும் 4 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு வரை வரையிலும் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி தொகையாக 50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஒருநாடு கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்திலும் முன்னேறமுடியும் என்ற நிலையை உணர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். இன்றையதினம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ரூ. 38.95 கோடி ஒதுக்கீடு செய்து ஒருபள்ளிக்கு தலா ரூ.5லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்றால் மாணவர்களின் சுகாதாரத்தை பேணிகாக்கின்ற வகையில் ஒருதாயைபோல செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறார்கள். இதுபோன்று எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்க்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு கல்வியில் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டஇருக்கிறார் என்றார் மாண்புமிகு அமைச்சர். இந்நிகழ்ச்சியில்; மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.வசந்தாஅழகர்சாமி சிவகாசி நகர் மன்ற தலைவர் மருத்துவர் வே.க.கதிரவன் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.அசன்பதுருதீன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி.செல்வராஜ் பள்ளி தலைமையாசிரியை திருமதி. எஸ்.விமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |