எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேர்தல் பணி குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கடந்த முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தலுக்கான அடிப்படை பூர்வாக பணிகளை செய்வதற்காக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும் நியமித்து அவர்களை பல குழுக்களாக பிரித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு பூத் பகுதியிலும் மகளிர் 5 பேர், இளைஞர்கள் 10 பேர், மூத்த கழக உறுப்பினர்கள் 10 பேர் என பூத் கமிட்டி அமைக்கவும், பூத் கமிட்டியினர் அப்பகுதியிலேயே வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும், பூத் கமிட்டியினர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாதவாறு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர்கள் சரிபார்த்து சிறப்பான பணியை நூற்றுக்கு நூறு முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் நமது கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமது இயக்கத்தை ஜாதி, மத, சிறுபான்மை, பெரும்பான்மை வித்தியாசமின்றி தொண்டர்கள் இயக்கமாக நடத்தியதின் காரணமாகத்தான் நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்பும் வலுவான இயக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கத்தை நமக்காக பெற்றுத் தந்து தியாகம் செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நமது இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதல் மூத்த முன்னோடிகள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஒரே இயக்கம் நமது கழகம் தான் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். டெல்லியில் இருக்கின்ற தேசிய கட்சிகளெல்லாம் நமது இயக்கத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகின்ற அளவிற்கு தொண்டர்கள் கடமையுணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நமது இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுமே காரணம் என்றும் அவர்கள் காட்டிய அன்பான, பாசமான வழியில் நாம் நமது பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும், வளரும் என்றும், நமது கழகம் தான் என்றும் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் என்றும் உணர்த்தியுள்ளார். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அடிப்படை தேர்தல் பணிகளை நாம் தற்போது முடித்திருக்கின்றோம். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளது. நம் கண்முன்னால் இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும், நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நாம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அடிப்படை பணிகளை நாம் நூற்றுக்கு நூறு முடித்துள்ளோம். தற்போது இக்கூட்டத்தின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள மீதமிருக்கின்ற போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய வேண்டிய நிலையில், கடமையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதனடிப்படையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் இருந்து வாக்குசாவடிக்கு குழுக்களாக சென்று தேர்தலுக்கான அடிப்படை பணிகளை சிறப்பாக கையாள வேண்டும். அப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து குழுக்கள் வாரியாக எப்பகுதிக்கு சென்று தேர்தலுக்கான பணிகளை செய்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் நகர, ஒன்றிய அளவில் பின்னர் சட்டமன்ற அளவில் தொகுத்து வழங்கிடும் பணியை பத்து தினங்களுக்குள் முடித்திட வேண்டும். இந்த பணிகளெல்லாம் எங்கு, எப்பொழுது, எந்த தேர்தல் வந்தாலும் நம்முடைய பணி தலையாய பணியாக கொண்டு சிறப்பாக பணியாற்றி காரணத்தினால் தான் நமது தேனி மாவட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்ற நிலையில் இருந்திருக்கின்றோம். அதே நிலையை நாம் தற்போதும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சதவிகித அடிப்படையில் தமிழகத்திலேயே முதலாவது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்று பெயரெடுத்தோமோ அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி தேனி தொகுதி என்று பெயரெடுத்து தர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், போடி சற்குணம், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.