முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.26 - நடிகர் விஜய்காந்த் தலைமையிலான தேசிய முன்னேற்ற திராவிடர் கழகத்திற்கு முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க. முதலில் முரசு சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைக்காததால் அந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. 

இந்தநிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் அந்த கட்சி சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுப்ரீம்கோர்ட்டு அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் தலையிட முடியாது. தேர்தல் கமிஷனை அணுகலாம் என்று கூறியது. இதனையொட்டி தேர்தல் கமிஷனை தே.மு.தி.க. மீண்டும் அணுகி வரும் தமிழக தேர்தலில் எங்கள் கட்சிக்கு முரசு சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கோரியது. இதனை பரிசீலித்த தேர்தல் கமிஷன், ஒரு மாநிலத்தில் 10 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் ஒரு கட்சிக்கு அந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்யலாம் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறையின்படி தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்று சென்னையில் தே.மு.தி.க.வின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்துள்ளது. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து விஜயகாந்த் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் விஜய்காந்த் போட்டியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago