முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து 5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு காலணிகள், பாதுகாப்பு தலைகவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 கட்டுமான  தொழிலாளர்களுக்கு அந்த பெட்டகத்தை வழங்கி துவக்கி வைத்தார். இப்பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டஒரு பெட்டகத்தின் மதிப்பு 2,177 ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ்குமார் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து