முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி  மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து  கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம்  வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம்  பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 13.11.2019 முதல் 31.3.2020  வரை 140 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 384.05 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து மற்றும் தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட  நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள    2756.62  ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி   பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து