Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 6 நகராட்சி தலைவர் பதவிக்கு 50 பேர் விருப்ப மனு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து அண்ணா தொழிற்சங்க கன்வீனர் எஸ்.டி.கே ஜக்கையன், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான் ஆகியோர் பெற்றனர். அதிமுக சார்பில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட 2000க்கும் அதிகமானோர் விருப்ப மனு வழங்கினர். இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், சின்னமனூர். கம்பம், போடி, கூடலூர் ஆகிய 6 நகர்மன்ற தலைவர் பதவிக்கு 50 பேர் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளனர். தேனி நகர்மன்ற தலைவருக்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முருகேசன், நகர துணை செயலாளர் ரெங்கநாதன், பொருளாளர் வீரமணி தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர் மற்றும் நாராயணசாமி ஆகியோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.  பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஒ.ராஜா தேனி நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மாவட்ட மீனவரணி செயலாளர் கருப்புஜி மற்றும் ஆப்பிள் முருகன் ஆகியோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.
பெரியகுளம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சீத்தாலட்சுமிகிட்டு, யாஸ்மின்அப்துல்சமது ராணி நாராயணன், ராஜலட்சுமி முகுந்தன் உள்ளிட்டோரும், கம்பம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு நகர மகளிரணி செயலாளர் சாந்தி நாகராஜ், ரம்யாசிவக்குமார், சித்ராசக்திவேல், சுபஷீலாஜெகநாதன் உள்ளிட்டோரும் சின்னமனூர் நகர் மன்ற தலைருக்கு நகர செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் மோகன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் பிச்சைக் கனி உள்ளிட்டோரும்,  கூடலூர் நகர் மன்ற தலைவருக்கு நகர செயலாளர் சோலைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் சேதுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் சின்னமாயன், மாவட்ட மாணவரணி தலைவர் மனோஜ் ஆகியோரும், போடி நகர்மன்ற தலைவருக்கு நகர் கழக துணை செயலாளர் முனியம்மாள், விஜயலட்சுமி பாலமுருகன், வேல்மணி காந்தி. லதா சுப்பிரமணி உள்ளிட்டோரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 6 நகர்மன்ற தலைவருக்கு 50 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளதால் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து