முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், ஜெயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மன்றங்களுக்கு மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்காக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு பல்கலைக் கழக மானியக் குழு சீர்மிகு பல்கலைக் கழகம் அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள 5 நிறுவனங்களுக்ககு அனுமதியளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் கூடுதலாக மேலும் 5 மாவட்டங்களை பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து