முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப்.21-தி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா அறிவிப்பு.

கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், தமிழகமெங்கும்  குடிநீnullர்ப் பஞ்சம், சுகாதார சீர்கேடு, மின்வெட்டு, ஊழல் போன்றவை தான் தலைவிரித்து ஆடுகின்றன. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் பேரூராட்சியில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த குடிநீnullர்த் திட்டத்தை சரிவர பராமரிக்காததன் காரணமாக குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், பெரும்பாலான இடங்களில் குடிnullநீருடன் கழிவு நீnullர் கலப்பதன் காரணமாகவும், கொசு மருந்து அடிக்கப்படாததன் காரணமாகவும் சுகாதார சீர்கேடு கொடிகட்டிப் பறப்பதாகவும், இதன் விளைவாக காலரா, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும், தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது மட்டுமல்லாமல், போளூர் ​ வந்தவாசி சாலை, கொம்மனந்தல்  வடமாதிமங்களம் சாலை, போளூர் ​ ஆத்துவாம்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும், பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காட்சி அளிக்கின்றன என்றும்,  மாம்பட்டு மற்றும் அத்திமூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் மக்கள் புலம்புகின்றனர். இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டிய திமுக​வைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவர் கொள்ளையடிப்பதிலும், போடாத கால்வாய்க்கு பணப் பட்டுவாடா செய்து அதன் மூலம் ஆதாயம் அடைவதிலும் தான் குறியாக இருக்கிறாரே தவிர மக்கள் பணிகளை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை.  பேரூராட்சி மன்றத் தலைவரின் முறையற்ற செயலுக்கு இணங்காததன் காரணமாக செயல் அலுவலர் அடிக்கடி மாற்றப்படுவதாகவும், தற்போது வேறு ஒரு பேரூராட்சியின் செயல் அலுவலர் தான் போளூர் பேரூராட்சிக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

எனவே, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் பேரூராட்சியை சீரழித்துக் கொண்டிருக்கும் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 21.2.2011  திங்கட் கிழமை அன்று காலை 10 மணி அளவில், போளூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க மாணவர் அணிச் செயலாளர்  ஆர்.வி. உதயகுமார்  தலைமையிலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்  முக்கூர் என். சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி,  இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago