முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 1,430 பேருக்கு கொரோனா; தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,79,046-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  

தமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,79,046 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,56,279 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,453 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 11,694 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 393 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,14,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை 1,19,30,240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 66,063 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 220 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து