முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தற்போது எஸ்.ஐ.ஆர். பணியின்போது பெயர் நீக்கம். இந்நிலையில் பி.எல்.ஓ. முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து