முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவர் இறந்த துக்கம் தாளாமல் மதுரையில் 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தாய் தற்கொலை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமிபுரத்தில் வசித்து வந்தவர் அருண் (வயது 46), கட்டிட காண்ட்ராக்டர். இவரது மனைவி வளர்மதி (38). இவர்களது மகள்கள் அகிலா (19), பிரீத்தி (17).

அருணுக்கு சொந்த ஊர் திருச்சி ஆகும். ஒத்தக்கடையில் அவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இவர் பல்வேறு கட்டிட பணிகளில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் சாதாரண காய்ச்சல் என நினைத்த அவர் மருத்துவ பரிசோதனை செய்தபோது மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டபோதும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார்.

கணவரின் திடீர் மரணம் வளர்மதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அருண் இறந்ததால் 2 மகள்களுடன் என்ன செய்வது என்று தெரியாமல் வளர்மதி தவிப்புக்குள்ளானார். ஒவ்வொரு நாளும் ஒருயுகமாக தெரிய அன்றாட செலவுக்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

இதன் காரணமாக பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை சமாளித்தார். ஆனால் நாளுக்கு நாள் கடன் அதிகமானதே தவிர அதனை திருப்பி செலுத்த அவரால் முடியவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

இனி கடன் வாங்காமல் வாழ்வது என்றால் உயிரை விடுவதுதான் சிறந்தது என வளர்மதி முடிவு செய்தார். தனக்கு பிறகு மகள்கள் அனாதையாகி விடக்கூடாது என கருதிய அவர், 2 மகள்களிடமும் தற்கொலை முடிவு குறித்து கூறினார். இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த மகள்கள் பின்னர் தாயின் முடிவுக்கு சம்மதித்தனர்.

கார்த்திகை திருநாள் என்பதால் 3 பேரும் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன் பிறகு உள் அறைக்கு சென்று விட்டத்தில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் வீட்டில் ஆசையாக நாயும் வளர்த்து வந்தனர். அந்த நாய் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி அக்கம் பக்கத் தினரிடமும் பாசமாக பழகி வந்தது. சாவதற்கு முன்பு பாசமாக வளர்த்த நாயையும் அவர்கள் கொல்ல முடிவு செய்தனர். இதற்காக விஷம் வைத்த உணவை கொடுத்தனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த நாயும் பரிதாபமாக இறந்தது.

வளர்மதியின் மகள் தினமும் காலையில் பால் வாங்க செல்வது வழக்கம். அப்போது அவருடன் ஆசையாக வளர்த்த நாயும் பாதுகாப்பாக பின்னால் செல்வதுண்டு. ஆனால் நேற் காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. மேலும் நாயையும் காணவில்லை.

அறிமுகம் இல்லாத நபர்கள் நடந்து சென்றால் நாய் குரைத்து எச்சரிக்கை செய்யும். ஆனால் நேற்று நாய் எந்த சத்தமும் கொடுக்காதது அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் வளர்மதி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்த சத்தமும் வர வில்லை.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தான் வளர்மதி தனது 2 மகள்களுடன் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. அவர்கள் ஆசையாக வளர்த்த நாயும் வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தது.

போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வளர்மதி மற்றும் அவரது மகள்கள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வளர்மதி வளர்த்து வந்த அவரது தம்பி மகள் மேகலா (13) வீட்டில் இல்லாதது குறித்து போலீசிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக மேகலாவை பக்கத்து வீட்டிற்கு வளர்மதி அனுப்பி இருப்பது தெரியவந்தது. சிறுமியான அவர் அத்தை சொன்னதால் நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டு முன்பு திரண்டனர்.

ஒரே வீட்டில் தாய், மகள்கள் தற்கொலை செய்த சம்பவம் ஒத்தக்கடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து