முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தசைச்சிதைவு நோய் பாதித்தவர்களுக்கு பகல் நேர பராமரிப்பு மையங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்: 3 கலெக்டர்களுக்கு விருது வழங்கினார்

திங்கட்கிழமை, 21 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை திறந்து வைத்தார்.

மேலும், பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10 ஆயிரம் திறன் பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் கடந்த 11.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் 4 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 10 மாவட்டங்களில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் சேலம், திருவண்ணாமலை மாவட்டம் – வந்தவாசி வட்டம், சென்னாவரம், திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உபகரணங்களுடன் கூடிய 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இம்மையங்களை பராமரிக்க அரசின் பங்களிப்பாக ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

2020 - 2021–ம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்ட அறிக்கையில், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர், பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்கு, தக்க செயலிகளுடன் கூடிய 10 ஆயிரம் திறன்பேசிகள், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

10 ஆயிரம் திறன்பேசி வழங்கும் திட்டம்

அதன்படி, பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளவும், நவீன தகவல் தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்திட ஏதுவாகவும், 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் நேற்று 7 பார்வை மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

முதலமைச்சரால் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்த சிறந்த சமூகப் பணியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

3 கலெக்டர்களுக்கு விருது

மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2018–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கும், 2019–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தனுக்கும், 2020–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும், முதலமைச்சர் நேற்று வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமூகநலத் துறை அமைச்சர் வி. சரோஜா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து