எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24–ந்தேதி அன்று வீடுகள்தோறும் தீபம் ஏற்றி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர உறுதிமொழி எடுங்கள் என்று அ.தி.மு.க.வினரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அம்மாவின் விசுவாசத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழிகாட்டுதலின்படி, அந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையில் இன்றுவரை அ.தி.மு.க. அடிபிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உள்ள மக்கள் இயக்கங்களில் நம் எழுச்சி மிக்க அ.தி.மு.க. மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட இயக்கத்தை தாய்போல் சீராட்டி, பல இன்னல்கள் வந்தபோதும் காவல் தெய்வமாக காப்பாற்றி, ஈடு இணையில்லாத வீரியமும், உயிரோட்டமும் உள்ள ஓர் இயக்கமாக நம் கைகளில் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் நம் பாசத் தலைவி அம்மா.
அம்மா இம்மண்ணுலகைவிட்டுப் பிரிந்திருந்தாலும், அம்மாவின் புனித ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அம்மாவின் ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை.
இந்த நம்பிக்கையிலிருந்து தான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்குத் தெரியும்.
நம் விசுவாசமானது அம்மாவிற்கும், அவரது கண்ணுக்கு கண்ணாய் இருந்த இந்த இயக்கத்திற்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் தான் சொந்தம்! விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாதது அம்மாவிடம் நாம் ஒன்றரைக்கோடி தொண்டர்களும் கொண்ட இந்த விசுவாசம் என்பதை நாம் அறிவோம்.
இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.
இந்த குறிக்கோளோடு கழக கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம்.
பிப்ரவரி 24– மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்! இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் என் இல்லம் அம்மாவின் இல்லம் என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அ.தி.மு.க. இயக்கத்தையும் காப்பேன்! இது அம்மா மீது ஆணை!
அம்மாவின் பிள்ளைகளாகிய நாம் மக்களுக்காக என்றும் ஓடி ஓடி உழைப்போம்! இன்னும் இன்னும் பல நன்மைகளை ஊருக்கெல்லாம் கொடுப்போம்! வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி! வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம்! இது உறுதி! உறுதி! உறுதி!
அன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
நியூயார்க் : அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02 Jul 2025அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு சம்பம்: இந்தியா கண்டனம்
-
வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினம்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள்
02 Jul 2025பர்மிங்காம் : வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினத்தை முன்னிட்டு 2-வது டெஸ்டி போட்டியிலும் இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமெரிக்க அரசு முடிவு
02 Jul 2025நியூயார்க், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
-
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆறுதல்
02 Jul 2025சிவகங்கை : போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்றார். அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தி
-
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
02 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
-
2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் நீக்கம் ஏன்..? - கேப்டன் சுப்மன் கில் பதில்
02 Jul 2025பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ரா, குல்தீப் இடம் பெறாதது குறித்து கேப்டன்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.