முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-ல் ஊரடங்கு நிறைவு: கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவுடன் நாளை முதல்வர் ஆலோசனை

வியாழக்கிழமை, 20 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 24-ம் தேதியன்று ஊரடங்கு முடிவடைய உள்ளதை அடுத்து கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவாக தமிழக சட்டப்பேரவைக் கட்சிக் குழு உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு குறித்தும் ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருந்துகளின் தேவை, படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், அதனால் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொற்றுப் பரவல் மேலும் கூடியதை அடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன.

ஆனாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  கரோனா குறித்து முதல்வர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் தி.மு.க.விலிருந்து மருத்துவர் எழிலன், அ.தி.மு.க.வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உள்ளனர். இந்தக் குழு தற்போதுள்ள சூழ்நிலை குறித்து முதல்வருக்கு ஆலோசனை அளிக்கும்.

இந்நிலையில் நாளை 22-ம் தேதி இக்குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தமிழகம் சந்திக்கும் கொரோனா சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சினைகள் குறித்து அலசப்படும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து